திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பகுத்தறிவுவாதிகள்

பகுத்தறிவுவாதிகள் என்றும் திராவிடன் என்றும் ஊரை ஏமாற்றுகிறது ஒரு கூட்டம். இவர்களைத் தவிர யாருக்கும் பகுத்தறிவு கிடையாது என்றும், அது அவர்களுக்கே சொந்தமான ஒன்று என்றும் வாதம் செய்கின்றனர்.

பெரியார் சொன்ன பெண் முன்னேற்றம், சாதி மறுப்பு, மது ஒழிப்பு போன்ற நல்ல கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு கடவுளே இல்லை என்ற ஒன்றில் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இவர்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால் அவர்களை தமிழின துரோகிகள் என்றும் பார்ப்பனன் என்றும் வாய்க்கு வந்தபடி சகட்டுமேனிக்கு திட்டுவதுதான் இவர்களுடைய வேலை.

மக்களுக்காக எழுதப்பட்ட புனைவுகளை வக்கிர எண்ணத்துடன் அணுகி தீயவைகளைப் பரப்புகிறார்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் தவறு இருப்பதாகச் சொல்லிச் சொல்லியே, இவர்கள் தமிழர்களிடமிருந்து கம்பனையும், பாரதியையும் பிரிக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் அதற்கு ஒரு படி மேலே போய், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளையும் குறை சொல்லுகிறார்கள்.

கடவுள் மறுப்பு எனப்படும் நாத்திகம் பற்றி பேசினால் தமிழ் மீது அடங்கா பற்று கொண்டவர்கள் போல காட்டிகொள்ளுகிறார்கள். எதிலுமே உங்களால் முழுமையான கொள்கை பிடிப்புடன் இருக்க முடியாதா? அதுதான் இன்றைய நாத்திகம் போலும்.

இந்த கேடு கெட்டவர்களின், நாத்திகம், என்பது எப்படிப்பட்டது தெரியுமா?

நாத்திகம் என்பது பெரியார் காலத்தில் 'கடவுளே இல்லை' என்று வாதிட்டது. பின்னர் அண்ணா காலத்தில் ஒருவனே தேவன் என்று மாறியது. அதன் பிறகு ஆட்சி அதிகார சுவையை அறிந்ததும் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதாக அமைந்தது. தற்போது, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களை மட்டும் ஆதரித்து பேசுவதோடு இந்துக்களையும் பார்ப்பனர்களையும் சகட்டுமேனிக்கு திட்டுவது.

நாத்திக கொள்கைகளின் பரிணாம வளர்ச்சி இது தான். இதற்கு எல்லாம் என்ன காரணம். அதிகார சுவையை அனுபவிப்பது மட்டுமே. பெரியாருக்கு அதிகாரமும், ஆட்சியும் தேவை இல்லை. ஆனால் அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துபவர்களுக்கு அதிகார போதை தேவை படுகிறது.

ஆட்சியில் நேரடியாக இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல. காங்கிரசை திட்டிக்கொண்டு அவர்கள் உதவியோடு எம்பி பதவியை பெறுவது. இலங்கை சென்று ராஜபக்ஷே உடன் குலவுவது. ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு முன்பு பெரியார் சிலையை அமைப்பது என ஒண்டிக்கொள்ளும் பிடாரிகளுக்கும் அதிகாரம் தேவை.

எனவே, முஸ்லிம் மற்றும் கிறித்துவ மதங்களை விமர்சிப்பது கிடையாது. இந்து மதம் 'சகிப்பு' மற்றும் பொறுமையை போதிக்கிறது. அதனால் தான் அளவு கடந்து விமர்சித்தாலும் இந்துக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். முஸ்லிம் போல இருந்தால் நாத்திகவாதிகள் விமர்சனம் செய்வார்களா?

பார்ப்பன எண்ணிக்கை தமிழ் நாட்டில் மிக குறைவு. அதிக அளவு வாக்குகள் இல்லாததால் அவர்களும் உங்களிடம் மிதி படுகிறார்கள். உத்தர பிரதேசம் போல பெரும்பான்மையினராக இருந்தால் நீங்கள் விமர்சனம் செய்வீர்களா? ஓட்டு போய் விடுமே? ஆட்சிக்கு வர முடியாதே?

ஆரியர்கள் வந்து தமிழனை அடிமை படுத்தியதாக சொல்லுகிறார்கள். தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்களில் எதனை பேர் ஆரியர் அல்லது பார்ப்பனர் என்று சொன்னால் நன்றாக இருக்கும். கிருத்துவம் வந்துதான் தமிழனுக்கு அறிவு வந்தது என்று சொல்லும் போலி பகுத்தறிவு வாதிகளின் கருத்தால் தமிழனை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதற்கு அதிகமாக கேவலப்படுத்தி விட்டார்கள்.

கல்லணை, தஞ்சை பெரிய கோயில். வான சாஸ்திரம், கடாரம் போன்ற கடல் கடந்த நாடுகளுக்கு கப்பல்கள் என கட்டியது எல்லாம கிருத்துவம் வந்த பிறகு தான் தமிழ் மன்னர்கள் செய்தார்களா? தமிழனுக்கு சொந்தமாக மூளையே கிடையாதா? இது தான் உங்களுடைய பகுத்தறிவு பேசும் சிந்தனையா? ஆங்கிலேய அடிமை புத்தி இன்னும் போகவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தொடாதே தீட்டு என்று சொன்ன காலம் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டது. ஆனால் இன்றுவரை வன்கொடுமை சட்டம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் கொடுமைகளை கண்டு பார்ப்பனர்கள் அல்லவே ஒதுங்கி போய் கொண்டு இருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்கரனோடு சண்டை போட்டுவிட்டு நெட்டில் நண்பனை தேடும் தமிழன் வாழும் காலம் இது. எனவே தான், இவர்களோடு கை குலுக்கும் வெள்ளை காரனை நண்பபனாக ஏற்றுக் கொண்டார்கள் போலும்.

தீவிரவாதம் என்றாலே சங்பரிவார் கும்பலைத்தான் இவர்களுக்கு தெரியும். ஆனால் இன்று வரை இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடத்தலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் மதானி முதலான முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவது தான் இவர்களுடைய வேலை.

தீவிரவாதம் பற்றி பேசினால் முஸ்லிம்களில், நேற்று வந்த முகமது அஜ்மல் கசாப் வரை உதாரணங்களை சொன்னால் இணய தளம் முழுவதும் பத்தாதே? குஜராத் கலவரம் கூட, 'கோத்ரா" ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னூட்டம் தானே?

மதம் என்பது மனிதனை பண்படுத்துவது. இந்து, கிருத்துவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுமே அன்பையே போதிக்கின்றன.

ஆனால், பகுத்தறிவு பேசிக்கொண்டு இருக்கும் நாதிகவதிகளால் தான், மதங்களுக்குள் பிளவும் மனிதர்களுக்குள் சண்டையும் ஏற்படுகின்றன. அதிகாரத்தை பிடிக்க எது வேண்டுமானாலும் செய்யும் கூட்டத்தின் அடிப்படை கொள்கை தானே நாத்திகம்.

பெரியார் சமுதாய பனி செய்ததால் தான் இப்படி எங்களால் கேள்வி கேட்க முடிந்தது என்று சொல்லிக்கொண்டு அவருடைய கொள்கைகளில் உறுதியாக இல்லாமல் ஆட்சியாளர்களிடம் அடிமைகளாக இருப்பவர்களுக்கு 'பெரியார் போதித்த நாத்திகத்தையோ பகுத்தறிவையோ பேச எந்த உரிமையும் இல்லை.

என்னை பொறுத்தவரை எல்லா மதங்களுமே ஒழுக்க நெறிகளையே கற்பிக்கின்றன. ஆனால், அந்த மதங்களுக்குள் பிரிவினையை தூண்டி குளிர் காய்வது பகுத்தறிவு என்று மாய்மாலம் செய்யும் நாத்திகவாதிகள் தான்.

எந்த ஒரு நாத்திகவாதியவது, தனக்கோ அல்லது தனது பிள்ளைக்கோ மத அடையாளம் இல்லாமல் இருக்கிற£னா? கேட்டால் சட்டத்தில் இடமில்லை என்று சொத்தை வாதம் செய்வது. 45 ஆண்டுகளாக நீங்கள் தானே சட்டம் போடுவது. இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் போடும் உங்களால் சான்றிதழ்களில் மதம் பற்றி குறிப்பிட வேண்டாம் என்று சட்டம் போட முடியாதா? அல்லது நாத்திகவாதி என்று ஒரு தனி பிரிவை உருவாக்க முடியாதா?

தமிழ் கடவுள் முருகன் இரண்டு பெண்களை கட்டி கொண்டிருக்கிறான் என பேசும் நீங்கள், உங்களின் தலைவர் பெரியாருக்கும், கருணாநிதிக்கும் எத்தனை மனைவிகள் என நினைத்துபார்க்க மறுக்கின்றீர்களே ஏன்?

தமிழன் ஓலைச்சுவடியில் எழுத்தாணிகொண்டு எழுதினான் என்பதற்காக அப்படியாகவா
இன்றும் எழுதுகிறோம்?

காலத்துடன் இணைந்து கணினியில் தானே எழுதுகிறோம்.

மலையாளி,தெலுங்கன் எல்லாம் திராவிடன் என்கிறீர்கள். அதாவது, தமிழனின் குடும்பம்
என்கிறீர்கள்.

ஆனால், தமிழனைக்கொல்ல அவன் கொள்ளியெடுத்துக்கொடுக்கிறானே! இது கண்முன்னேதானே
நடந்துகொண்டிருக்கிறது.

ஒருமுறையா? இரண்டுமுறையா? காலாகாலமாக நதிநீர்ப்பங்கீடு உட்பட அனைத்துவழிகளிலும்
தமிழனுக்கு எதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறானே!
இதனால், பாதிக்கப்படுவது தமிழ் விவசாயியும் தமிழ் மீனவனும்தானே!
இதற்கும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமோ?

கைப்புண்ணுக்கு கண்ணாடியா வேண்டும்?

ஏன் அதிகம் வேண்டாம். ’நீங்களும் நானும் தமிழர்கள்’ என்று நான் மட்டுமே
சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் தமிழராகிவிடுவீர்களா?
'நான் தமிழன்தான்’ என்று நீங்களும் அதை ஆமோதிக்கவேண்டும்; இல்லையேல் நான்
மட்டும்தான் தமிழன்.
இதுதானே யதார்த்தம்?

இதேபோலத்தான், தமிழனிடம் மட்டும்தான் ‘திராவிடம்’ என்ற சொல் புழக்கத்தில்
இருக்கிறது.

*தமிழ்பேசும் மாநிலம் தவிர, வேறு ஏதாவது மாநிலத்தில் இச்சொல் புழக்கத்தில்
உள்ளது என்று உங்களால் காட்டமுடியுமா?*



பெரியார் என்பவர் 90 வயதுவரை வாழ்ந்த ஒரு அற்புதமான மனிதர் மட்டுமல்லாது, தமது
கடைசி மூச்சுவரை தமிழனின் இழிநிலையைப்போக்கப் பாடுபட்டவர்.
அவர் ‘திராவிடம்’ என்று சொன்னபோது இருந்த நிலைமை அவரின் கடைசிக்காலங்களில்
இல்லை. எனவேதான் அவர், தமது கடைசிக்காலத்தில் தமிழ்நாடு என்பதையே
வலியுறுத்திப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்.

இதையெல்லாம் கருத்திலெடுக்காது, மேலும் தமிழனைச் சுரண்டுவதற்காகவே ஒருசிலர்
‘திராவிடம்’ என்று கூச்சல்போடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள், ஒன்றில் அயல்மாநிலத்தவராக இருப்பார்; அல்லது , பார்ப்பனனாக
இருப்பார். அதுவும் இல்லையேல், இந்த இருவகையினரையும் நக்கிப்பிழைப்பவராக இருப்பார்.

எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகிறது. பகுத்தறிவுகாரர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு இவர்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று தங்களை சொல்லிக்கொண்டால் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இப்பேர்ப்பட்ட வெற்றுவேட்டுகளைக் கண்டுகொள்ளாமல் நம்வழியிலேயே பயணிப்போம்.

வெற்றி நமதே! நிச்சயம் வெல்வோம்!!!!! ----------- ஏனெனில்


*நாம் தமிழர்!*
---------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக