ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பத்து கட்டளைகள்



தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில்  மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

என்னிடத்தில் அன்பு கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

ஆறு நாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும் உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மீருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற யாதொரு அன்னியனானாலும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

கர்த்தர் ஆறு நாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஆகையால் கர்த்தர் ஓய்வு நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.

6. கொலை செய்யாதிருப்பாயாக.

7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

8. களவு செய்யாதிருப்பாயாக.

9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.

10. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
--------------

புதன், 8 டிசம்பர், 2010

அழகான ராட்சஷி


என் காதலி ஒரு ராட்சஷி

அழகிலும் சரி, குணத்திலும் சரி.
-------------------

உண்மை அழகு


நான் பேரழகன்- என்னவளின்

பார்வை என் மீது- படும்

நேரத்தில் மட்டும்..........

காத்திருந்த காதல்


நீ என்னை விட்டு பிரிந்தது இதயத்திற்கு தெரிந்தாலும்

கண்களுக்கு தெரியவில்லை.

அதனால்தான் என்னவோ

இன்றாவது உன் அழைப்பு வராதா- என

காத்திருக்கிறது என் கண்கள்......

தொலைபேசியை நோக்கி. 
---------------------

வியாழன், 28 அக்டோபர், 2010

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஒரு ஓவியர் வடிவேலுவை படம் வரைந்து கொண்டிருப்பார். வடிவேலுவின் தலையும், இன்னொருவருடைய உடலையும் சேர்த்து, ஏதோ புஜ பல பராக்கிரமசாலியை போல ஓவியம் அருமையாக வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.

அப்போது, வடிவேலுவிடம் அமைச்சர் மங்குணி பாண்டியன் (அமைச்சர் அன்பழகன் மாதிரி) கேட்பார். எதற்காக அரசே இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று. அதற்கு வடிவேலு சொல்லுவார், இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது. அவர்கள் அனைவரும் மாமன்னர் 23-ம் புலிகேசி ஒரு மாவீரச் சக்கரவர்த்தி என்று நினைப்பார்கள். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்று சொல்லுவார்.

அப்படித்தான் இன்று தமிழ்நாட்டிலும் வரலாறு மிக முக்கியம் என்று ஒரு புலிகேசி செய்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை. நமது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதிதான்.




தி.மு.க. என்று ஒரு பெரிய கொள்ளை கும்பலை அண்ணாத்துரை ஆரம்பித்தார். இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் அந்த கொள்ளை கும்பலை கருணாநிதி எப்படி கைப்பற்றினார் என்பது கருணாநிதிக்கு மட்டுமே தெரிந்த வரலாறு.

தமிழகத்தை விஞ்ஞானப்பூர்வமாக கொள்ளையடித்து சொத்துக்களை குவித்து விட்டார். ஆனால் வரலாற்றை பொறுத்த வரையில் இலவச திட்டங்கள், 1 ரூபாய் அரிசி என்று மக்களை ஏமாற்றி, தன்னை ஒரு கொடை வள்ளல் போலவே காட்டிக் கொள்கிறார்.

தி.மு.க. கொள்ளை கூட்ட தலைவர் அண்ணா இறந்தபொழுது, அவருக்கு அடுத்தபடியாக நெடுஞ்செழியன் தான் அந்த கொள்ளை கூட்டத்தில், முதல் அமைச்சர் பொறுப்புக்கு தகுதியானவராக இருந்தார். தற்காலிக முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றார். அந்த காலத்தில், கட்சியில் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இருந்த ஐம்பெரும் தலைவர்களில் கூட கருணாநிதியின் பெயர் கிடையாது. இன்று அந்த கட்சியின் பெரும் தலைவர்கள் பட்டியலில் இவருடைய குடும்பத்தினரை தவிர வேறு யாருமே கிடையாது.

கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்த எம்.ஜி.ஆரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெடுஞ்செழியனை ஏமாற்றி விட்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தார். இப்போது, அதைப்பற்றி கேட்டால், ஆட்சிக்கு வரவேண்டும் என்று தனக்கு விருப்பமே கிடையாது என்று வாய்கூசாமல் பொய் சொல்லுவார். நான் ஆட்சிக்க வரவேண்டும் என்று பெரியார் விரும்பினார், நெடுஞ்செழியன் விரும்பினார், எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று தனது பட்டியலை நீட்டிக்கொண்டே போவார். இந்த தகவல் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து விடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார்.


                                  


இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருந்தபோது, இவர் இங்கிருந்து கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார். எதற்காக, பிற்காலத்தில் நான் இலங்கை தமிழர்களுக்காக இத்தனை கடிதம் எழுதினேன் என்று எடுத்துக் காட்டுவதற்காகத் தான். பேச்சுகள் நாளடைவில் மறைந்து விடும். ஆனால் கடிதங்கள் ஒரு அத்தாட்சியாக எப்பொழுதும் பயன்படும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

இதைவிட கொடுமை என்னவென்றால், இலங்கையில் இறுதிகட்ட போரின்போது, காலை சாப்பாட்டுக்கும் மதியசாப்பாட்டுக்கும் இடையில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அருமையாக நடத்தினார்.

அந்த போராட்டத்தைக் கூட, உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி இருந்தால் அவரை பாராட்டுவதில் தவறில்லை. 86 வயது முதியவர், சுடுகாட்டுக்கு போகும் வயதில், தள்ளுவண்டியில் வந்து உண்ணாவிரதம் இருந்தார் என்றால் ஆச்சரியப்படக் கூடியது தான். பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் தனது அரசியல் லாபத்துக்காக அந்த நாடகத்தை நடத்தினார். இதுகூட உண்மையா என்பது சந்தேகமே.

வீட்டில் நடந்த பிரச்சினைக்காக தனது பொண்டாட்டி, பிள்ளைகளிடம் சண்டை போட்டுக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க வந்ததாக கூட ஒரு செய்தி உண்டு. எது எப்படியோ? அப்போதைக்கு அவருடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை தமிழர்கள் கிடைத்து விட்டனர். அதை வைத்து அரசியலும் நடத்தி விட்டார்.

மொத்தத்தில், தனது வீட்டு பிரச்சினைக்காக, உண்ணாவிரதம் என்ற பெயரில் அருமையான நாடகம் ஒன்றை நடத்தி ஒட்டு மொத்த தமிழ் மக்களையும், முட்டாள் ஆக்கி விட்டார்.


யாராவது இவரை குறை சொல்லி விட்டால், நான் அந்த காலத்தில் இலங்கை தமிழர்களுக்காக எப்படி எல்லாம் போராடினேன் என்று புராணம் பாட ஆரம்பித்து விடுவார். அதற்கு உதாரணமாக முரசொலியில் வெளிவந்த ஏதாவது ஒரு செய்தியின் பழைய பேப்பர் கட்டிங்கை எடுத்து காட்டி, முழு பக்கத்துக்கு அறிக்கை கொடுக்க ஆரம்பித்து விடுவார்.


அந்த காலத்தில், மத்திய அரசு இவருடைய ஆட்சியை கலைத்ததற்கு காரணம், இவர் விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்கிறார் என்று நீதிபதி சர்க்காரியா கமிஷன் கொடுத்த அறிக்கைதான். ஆனால் அதைக்கூட இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ததால் தான் ஆட்சி போனது என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டார். அதைப் பற்றி இன்றுவரை சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதேபோல, சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவர் பேசியபோது, நேருவைப் பற்றி தான் அந்த காலத்திலேயே எழுதி வைத்த கவிதையை பக்கம் பக்கமாக வாசித்தார். நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னார்.

ஆனால், மதுரையில் நேருவுக்கு கறுப்பு கொடி காட்டி, செருப்பை விட்டெறிந்ததை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார்.

அவசர நிலைக்காலத்துக்குப் பின்னர் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைவி இந்திராகாந்தி, மதுரைக்கு வந்தபோது மதுரை தெற்குவாசலில் அவரைக் கொல்ல முயற்சித்த கொடுமையையும் இவர் சொல்லவில்லை. இவற்றையும் சொல்லி இருந்தால் தெரிந்திருக்கும் கருணாநிதிக்கும் நேரு குடும்பத்துக்கும் உள்ள உறவு.

இந்திராவின் உயிரைக் காப்பாற்றிய பழ.நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் நல்ல சில காங்கிரஸ்காரர்களும் இன்றும் அதற்குச் சாட்சியாக உள்ளனர். ஆனால், இந்த சம்பவம் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரியாது.


ஒன்றும் வேண்டாம், கடந்த ஆண்டு சட்டசபை பொன்விழா மலர் வெளியிடப் பட்டது. அந்த பொன் விழா மலரில், சட்டசபையில் இவர் ஆற்றிய உரைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இல்லையென்றால், இவரை பாராட்டி யாராவது புகழ்ந்து பேசியிருந்த உரைகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால் எதிர்கட்சி தலைவர்கள் யாருடைய உரைகளும் அந்த மலரில் வெளியிடப்படவில்லை.


இவருடைய 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர். பேசிய உரைகள் கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவருடைய பேச்சுக்களும் இருந்தால்தானே, வருங்கால தலைமுறைகளுக்கு உண்மை தெரியும். அதனால்தான் திட்டமிட்டே தனக்கு துதி பாடியவர்கள் தவிர மற்ற அனைவருடைய பேச்சுகளையும் நீக்கி விட்டார். அந்த அளவிற்கு அந்த காலத்திலிருந்தே வரலாறு மிக முக்கியம் என்று திருத்திக் கொண்டே வருகிறார். பச்சை நிறம் தான் இல்லையே ஒழிய பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணங்களும் இவருக்கு உண்டு.

ஆக, வரலாற்றை முற்றிலுமாக திருத்தி எழுதி தன்னை ஒரு புஜ பல பராக்கிரமசாலியை போல காட்டிக் கொள்ள முயன்று விட்டார் என்பது மட்டுமே தெளிவான உண்மை. பிற்காலத்தில் வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று வடிவேலு சொன்னதைப் போலவே, நடக்கப்போகிறது.


கருணாநிதிக்கு வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு நீண்ட காலம் கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய 5 முறை முதல் அமைச்சராகி விட்டார். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, நிர்வாகத்தை சரியாக நடத்துகிறாரோ, இல்லையோ, வரலாற்றை மட்டும் நேர்த்தியாக திருத்திக் கொண்டிருக்கிறார்.


இதுவரையில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேலாக வரலாற்றை திருத்தி எழுதி விட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் மிச்சம் உள்ளதையும் முடித்து விடுவார்.

உதாரணமாக இவர்களுடைய கொள்ளை கம்பெனியின், அதிகாரப்பூர்வ செய்தித் தாளான  முரசொலியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய செய்தி நாளைய வரலாறு. இதுதான் இவங்க கம்பெனியோட கொள்கை. இதிலிருந்தே, இவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எது எப்படி இருந்தாலும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
----------------------

திங்கள், 18 அக்டோபர், 2010

என்னை கடலில் போட்டாலும், நான் தொல்லை கொடுப்பேன்-கருணாநிதி

தமிழர்களே, தமிழர்களே நீங்கள் கருணாநிதியின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கிப் போட்டாலும், அவர் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்.

அதற்கு உதாரணமாக மதுரை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா சொன்ன தீயசக்தி கருணாநிதியின் கதை.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு ஒரு மெல்லிய நீரோடையாக ஊருக்கே உழைக்க வேண்டும் என்கிற ஊழியச் சிந்தனையோடு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும்; அவருக்குப் பின் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவும்; மூதறிஞர் ராஜாஜியும்; பெருந்தலைவர் காமராஜரும்; பெரியவர் பக்தவத்சலமும்; அவருக்குப் பின் பேரறிஞர் அண்ணாவும்; அதன் பின் பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும்; அதற்குப் பின் நானும் தமிழகத்தை ஆண்ட போது, இந்தத் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் பின்னோக்கிப் பாருங்கள்.  இதை விளக்குவதற்கு ஒரு கதையை இங்கே நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர்.   அந்த கிராமத்திற்கு யார் செல்ல வேண்டுமானாலும் அல்லது அந்த ஊர் மக்கள் மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் பரிசல் மூலம் தான் பயணம் செய்ய முடியும்.  தினமும் காலையில் ஒரு பரிசல்காரன் அந்த கிராமத்தில் இருந்து பரிசல் ஓட்டி தன் பரிசலிலே ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு அக்கரைக்கு போவான். 

அது போல இருட்டுவதற்கு முன்பு மாலை 6 மணி அளவில் அதே பரிசல் ஓட்டி அக்கரையில் இருந்து அந்தக் கிராமத்திற்கு பரிசலை செலுத்துவான். அப்படித் தான் ஒரு நாள் பரிசலோட்டி பரிசலை கொண்டு வந்து நிறுத்தி ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு இருந்தான்.  அந்தக் கிராமத்தில் இருந்து வெளியூருக்குச் சென்று விளக்குமாறு விற்கும் பெண் ஒருத்தி தான் விற்றது போக மிச்சம் உள்ள விளக்குமாறு கற்றைகளை கையில் பிடித்துக் கொண்டு பரிசலில் ஏறி அமர்ந்தாள்.  அவள் அருகே குரங்கு வித்தை காட்டும் ஒருவன் குரங்கோடு பரிசலில் ஏறி அமர்ந்தான்.   அது போலவே பாம்பாட்டி ஒருவனும் கூடை நிறைய பாம்புகளை வைத்துக் கொண்டு பரிசலில் ஏறி உட்கார்ந்தான்.  இது போல அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பரிசலில்  அமர்ந்துவிட்டார்கள்.   பரிசல் புறப்பட தயாரானது. 

அப்போது ஒருவன் ஓடி வந்து பரிசலிலே ஏற முயற்சித்தான்.  ஆனால் பரிசல்காரன் அவனை ஏற்ற மறுத்து "ஒழுங்காக போய்விடு.  உன்னை ஏற்ற முடியாது" என்று மறுத்தான்.  அவனோ, நானும் ஏறிக்கொள்வேன் என்று அடம் பிடித்தான். 

பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் பரிசல் ஓட்டியிடம், அவனும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் தானே? உனக்குரிய கூலியைத்தான் தருகிறானே? அவனை ஏற்றிக் கொண்டால் என்ன? என்று கேட்டார்கள்.

உடனே பரிசல்காரன் சொன்னான் "அய்யோ, உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது.  கொடூர புத்தியும் எந்நேரமும் பிறருக்கு தீங்கு செய்யக்கூடிய விஷமச் சிந்தனையும் கொண்ட மோசமான தீயசக்தி அவன்.  பரிசல் இங்கிருந்து ஊர் போய்ச் சேருவதற்குள் எதையாவது செய்து நமக்கு ஆபத்தை விளைவித்துவிடுவான்.  நீங்கள் அவனுக்கு ஆதரவாக பேசாதீர்கள்" என்று மன்றாடினான். 
 
ஆனால், அந்தப் பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் "உனக்கு அந்த பயம் வேண்டாம்.  நாங்கள் வேண்டுமானால் அவனது கையையும் காலையும் கட்டி பரிசலிலே போட்டு விடுகிறோம்.  அவனால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது.  நமது பயணத்திற்கும் ஆபத்து வராது" என்று பரிசல் ஓட்டியிடம் ஆலோசனை சொன்னார்கள். 

அப்போது பரிசல் ஓட்டி "அய்யோ! இவன் மிக மோசமானவன்.  கை, கால்களை கட்டிப் போட்டாலும் அவனால் கெட்டது செய்யாமல் இருக்க முடியாது" என்று முடிந்தவரை மறுத்தான். 
   
ஆனால், ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் ஒருவனை மட்டும் விட்டுவிட்டுப் போவதில் நியாயமில்லை என்று பரிசல்காரனை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு அந்த நபருடைய கைகளையும், கால்களையும் கட்டி அவனைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு பரிசலை நகர்த்தச் சொன்னார்கள். பரிசல்காரன் அரைகுறை மனதோடு பரிசலை ஓட்டத் தொடங்கினான்.  ஏறத்தாழ இரண்டு மைல் அளவுக்கு பரிசல் கடந்து நடு ஆற்றைத் தொட்டது.

இன்னும் பாதி அளவு பயணத்தை கடக்க வேண்டும். மேகம் திரண்டு கொண்டு வந்தது.  காற்றும், மழையும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. 

இந்தத் தருணத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அந்தத் தீயசக்தி.  விளக்குமாறு கற்றைகளை பக்கத்தில் வைத்த வண்ணம் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த பெண்ணிடமிருந்து ஒரு விளக்குமாறு குச்சியை தனது வாயாலே கடித்து உருவினான்.  வாயில் வைத்திருந்த குச்சியை வைத்து குரங்காட்டியின் மடியில் உட்கார்ந்திருந்த குரங்கின் கண்ணிலே கொண்டு போய் குத்தினான்.  குரங்கு மிரண்டு பாம்பாட்டி அடுக்கி வைத்திருந்த பாம்புக் கூடையின் மீது விழுந்தது.  உடனே பாம்புக் கூடை சரிந்து உள்ளிருந்த பாம்புகள் அனைத்தும் பரிசலுக்குள்ளே விழுந்து ஓட, பரிசலில் பயணம் செய்த அனைவரும் அய்யோ!, அம்மா! என்று அலறி ஒரு புறமாய் ஒதுங்க பரிசல் கவிழ்ந்தது. 
தீயசக்திக்கு பரிதாபம் காட்டியவர்கள் நீரினுள் மூழ்கிப் போனார்கள். 

பரிசலில் புகுந்த அந்த தீயசக்தி போல அமைதியான தமிழ்நாட்டு அரசியலில் புகுந்தவர் தான் திருக்குவளை தீயசக்தி என்னும் கருணாநிதி.  பரிசல் ஓட்டி எப்படி அந்தத் தீய சக்தியை பரிசலில் ஏற வேண்டாம் என்று தடுத்தானோ; அது போலவே கருணாநிதியின் தீய குணங்களை அறிந்த காரணத்தால் தான் பேரறிஞர் அண்ணா கூட "தம்பி வா, தலைமையேற்க வா" என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைப் பார்த்துத் தான் அழைத்தாரே தவிர கருணாநிதியை அப்படி அழைக்கவில்லை. 

"நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று அண்ணா அவர்கள் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை ஜாடையாக அடையாளம் காட்டினாரே தவிர கருணாநிதியை அப்படி அடையாளம் காட்டவில்லை.  ஆனால், தமிழக மக்களின் பொல்லாத காலம் தமிழக அரசியலின் போதாத நேரம் கருணாநிதி என்னும் தீயசக்தியின் தந்திரங்கள் வென்றன.  அதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 

இவ்வாறு ஜெயலலிதா கூறினார். 
-------------

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பகுத்தறிவுவாதிகள்

பகுத்தறிவுவாதிகள் என்றும் திராவிடன் என்றும் ஊரை ஏமாற்றுகிறது ஒரு கூட்டம். இவர்களைத் தவிர யாருக்கும் பகுத்தறிவு கிடையாது என்றும், அது அவர்களுக்கே சொந்தமான ஒன்று என்றும் வாதம் செய்கின்றனர்.

பெரியார் சொன்ன பெண் முன்னேற்றம், சாதி மறுப்பு, மது ஒழிப்பு போன்ற நல்ல கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு கடவுளே இல்லை என்ற ஒன்றில் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இவர்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால் அவர்களை தமிழின துரோகிகள் என்றும் பார்ப்பனன் என்றும் வாய்க்கு வந்தபடி சகட்டுமேனிக்கு திட்டுவதுதான் இவர்களுடைய வேலை.

மக்களுக்காக எழுதப்பட்ட புனைவுகளை வக்கிர எண்ணத்துடன் அணுகி தீயவைகளைப் பரப்புகிறார்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் தவறு இருப்பதாகச் சொல்லிச் சொல்லியே, இவர்கள் தமிழர்களிடமிருந்து கம்பனையும், பாரதியையும் பிரிக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் அதற்கு ஒரு படி மேலே போய், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளையும் குறை சொல்லுகிறார்கள்.

கடவுள் மறுப்பு எனப்படும் நாத்திகம் பற்றி பேசினால் தமிழ் மீது அடங்கா பற்று கொண்டவர்கள் போல காட்டிகொள்ளுகிறார்கள். எதிலுமே உங்களால் முழுமையான கொள்கை பிடிப்புடன் இருக்க முடியாதா? அதுதான் இன்றைய நாத்திகம் போலும்.

இந்த கேடு கெட்டவர்களின், நாத்திகம், என்பது எப்படிப்பட்டது தெரியுமா?

நாத்திகம் என்பது பெரியார் காலத்தில் 'கடவுளே இல்லை' என்று வாதிட்டது. பின்னர் அண்ணா காலத்தில் ஒருவனே தேவன் என்று மாறியது. அதன் பிறகு ஆட்சி அதிகார சுவையை அறிந்ததும் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதாக அமைந்தது. தற்போது, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களை மட்டும் ஆதரித்து பேசுவதோடு இந்துக்களையும் பார்ப்பனர்களையும் சகட்டுமேனிக்கு திட்டுவது.

நாத்திக கொள்கைகளின் பரிணாம வளர்ச்சி இது தான். இதற்கு எல்லாம் என்ன காரணம். அதிகார சுவையை அனுபவிப்பது மட்டுமே. பெரியாருக்கு அதிகாரமும், ஆட்சியும் தேவை இல்லை. ஆனால் அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துபவர்களுக்கு அதிகார போதை தேவை படுகிறது.

ஆட்சியில் நேரடியாக இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல. காங்கிரசை திட்டிக்கொண்டு அவர்கள் உதவியோடு எம்பி பதவியை பெறுவது. இலங்கை சென்று ராஜபக்ஷே உடன் குலவுவது. ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு முன்பு பெரியார் சிலையை அமைப்பது என ஒண்டிக்கொள்ளும் பிடாரிகளுக்கும் அதிகாரம் தேவை.

எனவே, முஸ்லிம் மற்றும் கிறித்துவ மதங்களை விமர்சிப்பது கிடையாது. இந்து மதம் 'சகிப்பு' மற்றும் பொறுமையை போதிக்கிறது. அதனால் தான் அளவு கடந்து விமர்சித்தாலும் இந்துக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். முஸ்லிம் போல இருந்தால் நாத்திகவாதிகள் விமர்சனம் செய்வார்களா?

பார்ப்பன எண்ணிக்கை தமிழ் நாட்டில் மிக குறைவு. அதிக அளவு வாக்குகள் இல்லாததால் அவர்களும் உங்களிடம் மிதி படுகிறார்கள். உத்தர பிரதேசம் போல பெரும்பான்மையினராக இருந்தால் நீங்கள் விமர்சனம் செய்வீர்களா? ஓட்டு போய் விடுமே? ஆட்சிக்கு வர முடியாதே?

ஆரியர்கள் வந்து தமிழனை அடிமை படுத்தியதாக சொல்லுகிறார்கள். தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்களில் எதனை பேர் ஆரியர் அல்லது பார்ப்பனர் என்று சொன்னால் நன்றாக இருக்கும். கிருத்துவம் வந்துதான் தமிழனுக்கு அறிவு வந்தது என்று சொல்லும் போலி பகுத்தறிவு வாதிகளின் கருத்தால் தமிழனை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதற்கு அதிகமாக கேவலப்படுத்தி விட்டார்கள்.

கல்லணை, தஞ்சை பெரிய கோயில். வான சாஸ்திரம், கடாரம் போன்ற கடல் கடந்த நாடுகளுக்கு கப்பல்கள் என கட்டியது எல்லாம கிருத்துவம் வந்த பிறகு தான் தமிழ் மன்னர்கள் செய்தார்களா? தமிழனுக்கு சொந்தமாக மூளையே கிடையாதா? இது தான் உங்களுடைய பகுத்தறிவு பேசும் சிந்தனையா? ஆங்கிலேய அடிமை புத்தி இன்னும் போகவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தொடாதே தீட்டு என்று சொன்ன காலம் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டது. ஆனால் இன்றுவரை வன்கொடுமை சட்டம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் கொடுமைகளை கண்டு பார்ப்பனர்கள் அல்லவே ஒதுங்கி போய் கொண்டு இருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்கரனோடு சண்டை போட்டுவிட்டு நெட்டில் நண்பனை தேடும் தமிழன் வாழும் காலம் இது. எனவே தான், இவர்களோடு கை குலுக்கும் வெள்ளை காரனை நண்பபனாக ஏற்றுக் கொண்டார்கள் போலும்.

தீவிரவாதம் என்றாலே சங்பரிவார் கும்பலைத்தான் இவர்களுக்கு தெரியும். ஆனால் இன்று வரை இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடத்தலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் மதானி முதலான முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவது தான் இவர்களுடைய வேலை.

தீவிரவாதம் பற்றி பேசினால் முஸ்லிம்களில், நேற்று வந்த முகமது அஜ்மல் கசாப் வரை உதாரணங்களை சொன்னால் இணய தளம் முழுவதும் பத்தாதே? குஜராத் கலவரம் கூட, 'கோத்ரா" ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னூட்டம் தானே?

மதம் என்பது மனிதனை பண்படுத்துவது. இந்து, கிருத்துவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுமே அன்பையே போதிக்கின்றன.

ஆனால், பகுத்தறிவு பேசிக்கொண்டு இருக்கும் நாதிகவதிகளால் தான், மதங்களுக்குள் பிளவும் மனிதர்களுக்குள் சண்டையும் ஏற்படுகின்றன. அதிகாரத்தை பிடிக்க எது வேண்டுமானாலும் செய்யும் கூட்டத்தின் அடிப்படை கொள்கை தானே நாத்திகம்.

பெரியார் சமுதாய பனி செய்ததால் தான் இப்படி எங்களால் கேள்வி கேட்க முடிந்தது என்று சொல்லிக்கொண்டு அவருடைய கொள்கைகளில் உறுதியாக இல்லாமல் ஆட்சியாளர்களிடம் அடிமைகளாக இருப்பவர்களுக்கு 'பெரியார் போதித்த நாத்திகத்தையோ பகுத்தறிவையோ பேச எந்த உரிமையும் இல்லை.

என்னை பொறுத்தவரை எல்லா மதங்களுமே ஒழுக்க நெறிகளையே கற்பிக்கின்றன. ஆனால், அந்த மதங்களுக்குள் பிரிவினையை தூண்டி குளிர் காய்வது பகுத்தறிவு என்று மாய்மாலம் செய்யும் நாத்திகவாதிகள் தான்.

எந்த ஒரு நாத்திகவாதியவது, தனக்கோ அல்லது தனது பிள்ளைக்கோ மத அடையாளம் இல்லாமல் இருக்கிற£னா? கேட்டால் சட்டத்தில் இடமில்லை என்று சொத்தை வாதம் செய்வது. 45 ஆண்டுகளாக நீங்கள் தானே சட்டம் போடுவது. இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் போடும் உங்களால் சான்றிதழ்களில் மதம் பற்றி குறிப்பிட வேண்டாம் என்று சட்டம் போட முடியாதா? அல்லது நாத்திகவாதி என்று ஒரு தனி பிரிவை உருவாக்க முடியாதா?

தமிழ் கடவுள் முருகன் இரண்டு பெண்களை கட்டி கொண்டிருக்கிறான் என பேசும் நீங்கள், உங்களின் தலைவர் பெரியாருக்கும், கருணாநிதிக்கும் எத்தனை மனைவிகள் என நினைத்துபார்க்க மறுக்கின்றீர்களே ஏன்?

தமிழன் ஓலைச்சுவடியில் எழுத்தாணிகொண்டு எழுதினான் என்பதற்காக அப்படியாகவா
இன்றும் எழுதுகிறோம்?

காலத்துடன் இணைந்து கணினியில் தானே எழுதுகிறோம்.

மலையாளி,தெலுங்கன் எல்லாம் திராவிடன் என்கிறீர்கள். அதாவது, தமிழனின் குடும்பம்
என்கிறீர்கள்.

ஆனால், தமிழனைக்கொல்ல அவன் கொள்ளியெடுத்துக்கொடுக்கிறானே! இது கண்முன்னேதானே
நடந்துகொண்டிருக்கிறது.

ஒருமுறையா? இரண்டுமுறையா? காலாகாலமாக நதிநீர்ப்பங்கீடு உட்பட அனைத்துவழிகளிலும்
தமிழனுக்கு எதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறானே!
இதனால், பாதிக்கப்படுவது தமிழ் விவசாயியும் தமிழ் மீனவனும்தானே!
இதற்கும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமோ?

கைப்புண்ணுக்கு கண்ணாடியா வேண்டும்?

ஏன் அதிகம் வேண்டாம். ’நீங்களும் நானும் தமிழர்கள்’ என்று நான் மட்டுமே
சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் தமிழராகிவிடுவீர்களா?
'நான் தமிழன்தான்’ என்று நீங்களும் அதை ஆமோதிக்கவேண்டும்; இல்லையேல் நான்
மட்டும்தான் தமிழன்.
இதுதானே யதார்த்தம்?

இதேபோலத்தான், தமிழனிடம் மட்டும்தான் ‘திராவிடம்’ என்ற சொல் புழக்கத்தில்
இருக்கிறது.

*தமிழ்பேசும் மாநிலம் தவிர, வேறு ஏதாவது மாநிலத்தில் இச்சொல் புழக்கத்தில்
உள்ளது என்று உங்களால் காட்டமுடியுமா?*



பெரியார் என்பவர் 90 வயதுவரை வாழ்ந்த ஒரு அற்புதமான மனிதர் மட்டுமல்லாது, தமது
கடைசி மூச்சுவரை தமிழனின் இழிநிலையைப்போக்கப் பாடுபட்டவர்.
அவர் ‘திராவிடம்’ என்று சொன்னபோது இருந்த நிலைமை அவரின் கடைசிக்காலங்களில்
இல்லை. எனவேதான் அவர், தமது கடைசிக்காலத்தில் தமிழ்நாடு என்பதையே
வலியுறுத்திப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்.

இதையெல்லாம் கருத்திலெடுக்காது, மேலும் தமிழனைச் சுரண்டுவதற்காகவே ஒருசிலர்
‘திராவிடம்’ என்று கூச்சல்போடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள், ஒன்றில் அயல்மாநிலத்தவராக இருப்பார்; அல்லது , பார்ப்பனனாக
இருப்பார். அதுவும் இல்லையேல், இந்த இருவகையினரையும் நக்கிப்பிழைப்பவராக இருப்பார்.

எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகிறது. பகுத்தறிவுகாரர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு இவர்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று தங்களை சொல்லிக்கொண்டால் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இப்பேர்ப்பட்ட வெற்றுவேட்டுகளைக் கண்டுகொள்ளாமல் நம்வழியிலேயே பயணிப்போம்.

வெற்றி நமதே! நிச்சயம் வெல்வோம்!!!!! ----------- ஏனெனில்


*நாம் தமிழர்!*
---------------------------

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை


நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.

மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்.

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்.

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார்.
----------------

புதன், 4 ஆகஸ்ட், 2010

மகாகவி பாரதியார் கவிதை


தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று-பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ ?

-மகாகவி பாரதியார்

திங்கள், 22 பிப்ரவரி, 2010

கர்த்தர் உன்னைக் காப்பார்


ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இறங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை.
ஏசாயா-49:1